Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நெல்லை: தொடர் கனமழையால் இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை; நல்வாய்ப்பாக தப்பித்த முதியவர்

வடகிழக்கு பருவமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்நிலையில் நேற்றும் இன்றும் பெய்த தொடர் கனமழை காரணமாக குண்டாறு, ராமநதி, கடனாநதி, கருப்பாநதி போன்ற அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டது. அணைகள் தொடர்ந்து நிரம்பி வருவதால், அவற்றின் அருகிலிலுள்ள ஊர்களுக்குள் வெள்ள அபாயமும் விடுக்கப்படும் சூழல் நிலவுகிறது. அடவிநயினார் அணை மட்டும் இன்னும் மூன்று அடி மட்டுமே நிரம்ப வேண்டியுள்ளது. 

image

வெள்ள அபாயம் மட்டுமன்றி, வீடுகள் - கட்டடங்கள் யாவும் மழையில் பெரும் சேதங்களை சந்தித்து வருகின்றன. அந்தவகையில், நெல்லை மாநகர் பேட்டை பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையில், ஓடக்கரை தெருவைச் சேர்ந்த அப்துல் லத்தீப் (வயது 75) என்பவரின் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டின் மேற்கூரை நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தொடர்ந்து பெய்த கன மழையினால் பொதும்பி மளமளவென சரிந்துள்ளது. திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்தது, அப்பகுதி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது. சுவர் இடியும் சத்தம் கேட்டு, அப்துல் லத்தீப் உடனடியாக வெளியேறியதால், நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார்.

image

வீடு இடிந்து விழுந்ததை தொடர்ந்து, தற்போது அவர் அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார். மட்டுமன்றி நெல்லை - தென்காசியை ஒட்டிய அணைகள் நிரம்பி வருவதால், வெள்ள எச்சரிக்கையும் மக்கள் மத்தியில் உள்ளன. இன்னும் நிரம்பாத குளங்கள் மாவட்டத்தில் உள்ளதென்பதால், அவையும் நீர்வரத்து பெறும் பொருட்டு ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற அம்மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையும் மத்தியில் எழுந்துள்ளது.

- நெல்லை நாகராஜன்,  சுந்தரம் மகேஷ் | நாராயணமூர்த்தி

தொடர்புடைய செய்தி: கனமழை: தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்