தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரா திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்பட்ட தொற்று ஒமிக்ரான் வகை கொரோனாவா என பரிசோதனை நடைபெற்று வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கேப்டவுன் நகரிலிருந்து டெல்லி வழியாக மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்திற்கு திரும்பிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவமனையின் தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த நபரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒமிக்ரான் வகை கொரோனாவா என்பது பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் என மகாராஷ்டிர சுகாதாரத்துறையினர் கூறினர். தென் ஆப்பிரிக்காவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய நபரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே தங்கள் நாட்டுக்கு வந்த பயணிகள் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்