Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முனைவர் பட்டத்துக்கான ஊக்கத் தொகை: குடும்ப வருமான உச்சவரம்பு அதிகரிப்பு - தமிழக அரசு

முழு நேர முனைவர் பட்டத்திற்கான ஊக்கத்தொகை திட்டத்தில் பட்டியல் இன மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''முழு நேர முனைவர் பட்டத்திற்கான ஊக்கத் தொகை திட்டத்தில் பட்டியல் இன மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

image

ஆதி திராவிடர், பழங்குடியினர், மதம்மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவருக்கான ஊக்கத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்