Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்க - அமைச்சர் பொன்முடி

சென்னை ஐ.ஐ.டி.யின் நிகழ்ச்சிகளில் எதிர்காலத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதன் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி.யின் 58-வது பட்டமளிப்பு விழா கடந்த 20-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. நிகழ்வு தொடங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாதது, சர்ச்சையான நிலையில், பாமக, நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்து, பாமக சார்பில் வளாகம் முன் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

No bid to rename IIT Madras as IIT Chennai, informs education minister | Education News,The Indian Express

இதனிடையே, ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதி உள்ளார். அதில், ''தமிழ்நாட்டின் சென்னையில் 250 ஹெக்டேர் நிலம் ஒதுக்கித் தந்து ஐ.ஐ.டி. வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐ.ஐ.டி.யின் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில், தமிழ்நாடு அரசிடம் ஐ.ஐ.டி. சார்பில் ரூ.10 கோடி நிதியுதவி கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.ஐ.டி.யின் 58-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. எதிர்காலத்தில் அனைத்து நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்