Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தீபாவளி பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள்: டிஜிபி

தீபாவளி பண்டிகைக்காக வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவியுங்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளியை கொண்டாட அமைதியாகவும், பாதுகாப்பாகவும், கொரோனா விதிமுறை பொதுமக்கள் பின்பற்றும்டி தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடை வீதிகள், மார்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

மருத்துவமனை மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் அருகில் பட்டாசு வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசுகள் வெடித்தல் வேண்டும். தடைசெய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் வாங்கக் கூடாது. வெடிக்கவும் கூடாது. இதனால் தீ விபத்துக்கள் தடுக்கப்படும்.

image

பெற்றோர்களின் கண்காணிப்பில் குழந்தைகள் பட்டாசு வெடித்தல் வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம். காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அவசர உதவி எண் 101 மற்றும் அவசர காவல் உதவி எண்கள் 100 மற்றும் 112-ல் அழைக்கவும்.

வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்பவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல் ரோந்து உங்கள் வீட்டிற்கு வருவதை உறுதிப்படுத்த முடியும். நடுஇரவில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள், அவ்வப்போது ஓய்வு எடுத்து பயணம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் விபத்துக்களை தடுக்கலாம்.

image

ரயில், பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இரவு முழுவதும் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்