Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் மீண்டும் 10 ஆயிரத்துக்கு மேல் பதிவான கொரோனா தொற்று

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பல வாரங்களுக்கு பிறகு மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியது. இந்தியாவில் ஒரேநாளில் 13,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் நேற்று 9,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 13,154ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் 7,486 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,51,292 லிருந்து 3,42,58,778ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.38%. உயிரிழப்பு விகிதம் 1.38%ஆக உள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 286 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,80,592லிருந்து 4,80,860ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 82,402 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

image

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 961ஆக உயர்ந்துள்ளது. ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டவர்களில் 320 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 961 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக டெல்லியில் 263, மகாராஷ்டிராவில் 252, குஜராத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கேரளாவில் 65, தெலங்கானாவில் 62, ராஜஸ்தானில் 69, தமிழ்நாட்டில் 46 மற்றும் கர்நாடகாவில் 34 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

கேரளாவில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமல் - ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்