Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

''ஓமைக்ரான் வைரஸ் விவகாரத்தில் அலட்சியம் வேண்டாம்'' - டாக்டர் மோகன் குப்தே

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் மத்திய அரசு கவனமாக கையாள வேண்டும் என சென்னையில் ஐசிஎம்ஆரின் தொற்று நோயியல் பிரிவின் ஓய்வு பெற்ற நிறுவன இயக்குநர் டாக்டர் மோகன் குப்தே தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் ஒருவேளை அதிக அளவில் பரவினால், அதை சமாளிக்க கூடிய அளவுக்கு மருத்துவ துறையின் உள்கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே தயாராக வைத்திருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வேகமாக பரவினாலும், ஆரம்ப நிலையில் அது மிக மிதமான பாதிப்பையே ஏற்படுத்தியிருக்கிறது என கூறியுள்ளார்.

எனவே, ஒமைக்ரான் குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டால், தற்போதைக்கு அச்சமடைய தேவையில்லை என கூறியுள்ளார். பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் மிக குறைவாகவே இருக்கும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்