Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமனம்

சர்வதேச நாணய நிதியம் துணை நிர்வாக இயக்குனராக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமனம் செய்யப்படவுள்ளார்.
 
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியம் (IMF), 190 நாடுகள் சேர்ந்த ஒரு நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது உலகளாவிய நாணய ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், அதிக வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள வறுமையைக் குறைக்கவும் செயல்பட்டு வருகின்ற ஒரு அமைப்பாகும்.
 
image
சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர் பதவிகளிலும் பெண்கள் பணியாற்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்