Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"சாதியற்ற சமத்துவ முன்னெப்பு" - மதுரையில் 'மார்கழியில் மக்களிசை விழா'

இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மார்கழியில் மக்களிசை விழா பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

100-க்கும் மேற்பட்ட பறை இசைக்கருவிகள்... 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள்... ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு இடையே பாடப்பட்ட பாரம்பரிய இசை தந்த உற்சாகத்தால் களைகட்டியது, மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகம். மார்கழி மாதம் என்றாலே சபாக்களில் கர்நாடக சங்கீதமும். வீதிகளில் திருப்பாவை பாடல்களாலும் நிறைந்திருக்கும். அவ்வழியில் மக்களின் இசையையும், அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய கலைகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித். அந்த முயற்சியின் செயலாக்கம்தான் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த இசை நிகழ்ச்சி.

துக்க நிகழ்வுகளுக்கு பாடப்படும் ஒப்பாரி பாடலை இந்நிகழ்ச்சியின் முதல் பாடலாக தொடங்கி புதுமை செய்தது ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த இசைக்கலைஞர்களின் நையாண்டி மேளம், ராப் இசை பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வடசென்னயின் பாரம்பரிய இசையான கானா, ஹிப் ஹாப் ஆகிய பாடிய குழுவினர், அரங்கத்தையே அதிர வைத்தனர்.

எளிய மக்களின் நிலம் சார்ந்த வாழ்க்கை, பண்பாடு, போராட்டம் என பல சாராம்சங்கள் நிறைந்த பாடல்கள் மூலம் சாதியற்ற, சமத்துவ சமுதாயத்தை முன்னெடுப்பதே நோக்கம் எனக்கூறினார், இயக்குநர் பா.ரஞ்சித்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்