சென்னையின் பூந்தமல்லி நகராட்சி அம்மன் கோவில் தெருவில் நேற்று பெய்த கனமழையின் விளைவாக 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை, மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி நகராட்சிக்குட்பட்ட அம்மன் கோயில் தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்குதான் சரிபாதி குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் பெருமளவு சூழ்ந்துள்ளது. பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீருடன் கழிவு நீர் கலந்து இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வீட்டுக்குள் புகுந்த நீரால், மக்களின் கட்டில் பீரோ உள்ளிட்ட உடமைகள் நீரில் மிதக்கின்ற அவலமும் அப்பகுதியில் அரங்கேறி வருகிறது.
சமீபத்திய செய்தி: சென்னையில் பெய்த மழையின் அளவு: பகுதிவாரியான முழு விவரம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்