Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தியதாக சான்றிதழ் - மதுரை இளைஞர் அதிர்ச்சி

(கோப்பு புகைப்படம்)
மதுரையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தாத நபருக்கு ஊசி செலுத்தியதாக சான்றிதழ் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று கள்ளந்திரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு) முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார். அவருக்கான இரண்டாம் டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் 2 முதல் 30-ஆம் தேதி வரை என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளியூரில் தங்கிப் படிப்பதால் அடுத்த வாரம் மதுரைக்கு வருகையில் அதே கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தார். ஆனால் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை Cowin இணையதளத்திலும் உறுதி செய்துள்ளனர்.
 
image
இந்த குழப்பம் குறித்து, சம்பந்தப்பட்ட கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்த போது, தவறுதலாக அப்படி பதிவிடப்பட்டு இருக்கலாம் என்றும், மீண்டும் இந்த மையத்தில் வந்து விபரத்தை சொல்லி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறினர். மேலும், இந்த மையத்திற்கு வர இயலாவிட்டால் என்ன செய்வது என கேட்டதற்கு, எந்த மையமாக இருந்தாலும் பரவாயில்லை அங்கு சென்று தவறுதலாக பதிவிடப்பட்ட விபரத்தை தெரிவித்து செலுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
 
இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டதற்கு, அப்படி சான்றிதழ் தவறுதலாக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அப்படி வந்திருந்தால் அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் உடனே வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்