Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கூடுதல் வசதிகளுடன் தானாகவே அழியும் வாட்ஸ்அப் மெசேஜ்

வாட்ஸ்அப் செயலியில் தகவல்கள் தானாகவே அழியும் வசதி மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இதன்படி பயனாளர்கள் தாங்கள் அனுப்பும் அனைத்து தகவல்களும் ஒரு குறிப்பிட்ட அவகாசத்திற்கு பிறகு அழிந்துவிடும்படி தேர்வு செய்யமுடியும். இந்த அவகாசம் 24 மணி நேரமாகவோ, 7 நாட்களாகவோ அல்லது 90 நாட்களாகவோ இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் 7 நாட்களுக்கு பிறகு அழிந்துவிடும் வகையில் தேர்வு செய்யும் முறை இருந்து வந்தது. இதில் ஒவ்வொரு நபரின் உரையாடலுக்கும் தனித் தனியாக தேர்வுசெய்து தகவல்களை அழிக்கும் முறை இருந்தது.
 
image
ஆனால் இனி அவ்வாறு இல்லாமல் மொத்தமாக அனைத்து உரையாடல்களிலும் தாங்கள் அனுப்பும் செய்திகள் அழிந்துவிடும்படி அமைத்துக் கொள்ளலாம். இந்த வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக வாட்ஸ்அப் செயலியை நடத்தி வரும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்