Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஒமைக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் நான்காவது அலை

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்கா நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் உள்ள 9 மாகாணங்களில் 7-ல் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் அமைச்சர் ஜோ பாஹ்லா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுதிய அவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை நிர்வகிக்க முடியும் என்றும் கூறினார்.
 
 
உலக அளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் கொரோனா வைரஸ், கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்