Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் ஏறிய வேகத்தில் இறங்கிய கொரோனா: புதிதாக 2,55,874 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் இன்றும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 50,190 குறைவாகும்.

image

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,67,753 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 614 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 22,36,842 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி பாதிப்பு விகிதம் 15.52 சதவீதமாக உள்ளது.

இதையும் படிக்க: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாவது நாளாக சரிவு - சென்னை, கோவையில் அதிக தொற்று

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்