நாமக்கல்லில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 8500 பருத்தி மூட்டைகள் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இதில், நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 8500 பருத்தி முட்டைகளை விற்பனை கொண்டு வந்திருந்தனர்.
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 9000 முதல் ரூ. 10595 வரையிலும், டி.சி.எச் ரகம் குவிண்டாலுக்கு ரூ. 10299 முதல் ரூ.16370 வரையிலும், கொட்டு ரகம் குவிண்டால் ₹.3969 முதல் ₹.6969 வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் 8500 மூட்டைகள் 3 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து வரத்து குறைவாக உள்ள நிலையில், தொடர்ந்து இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்