Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளாவிலிருந்து கோழிகள், வாத்துகள், முட்டைகளை கொண்டுவர தடை

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துகள் மற்றும் முட்டைகளை தமிழகம் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கேரள எல்லையில் 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் கோழிகள், வாத்துகள், அதன் முட்டைகள் மற்றும் கோழியினம் சார்ந்த பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்படுகிறது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து கோழிப் பண்ணைகளிலும் தீவிர பாதுகாப்பு நடைமுறைகளை கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்