Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவிலிருந்து மீண்ட 3 மாதத்திற்கு பின்பே தடுப்பூசி - மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனாவிலிருந்து குணமடைந்து 3 மாதங்கள் கழிந்த பின்னரே அத்தொற்று தடுப்பிற்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் கடிதம் எழுதியுள்ளார். ஒருவருக்கு ஆய்வக பரிசோதனயில் கொரோனா உறுதியானால் அவர் குணமடைந்து 3 மாதங்கள் கழித்தே தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதை கடந்தவர்களுக்கும் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்றும் விகாஸ் ஷீல் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

image

அறிவியல் அடிப்படைகள் படியும் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைப்படியும் இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக விகாஸ் ஷீல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கோவின் செயலியில் ஒரே தொலைபேசி எண்ணில் 6 பேர் பதியலாம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்