Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தருமபுரி: கொரோனா ஊரடங்கை மீறி சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி - 40 பேர் மீது வழக்கு

தருமபுரி அருகே கொரோனா ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தியதாக 40 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டுள்ளது. பந்தல் அமைத்து ஒரே இடத்தில் 15 கிலோ சிக்கனை 15 பேருக்கு பரிமாறி போட்டி நடத்தப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியின்றி அமர்ந்து ஒரு கிலோ சில்லி சிக்கனை இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டுள்ளனர்.

Paneer chilli Chicken center in the city Dharmapuri

மேலும் பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாகயும் விழா நடத்தியோர் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது அதியமான்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்