Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா: ஒரே நாளில் 90,928 பேருக்கு பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய 58,097 என்ற தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட 56 சதவீதம் அதிகமாகும்.

தற்போது நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேரும், டெல்லியில் 465 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா இந்தியாவில் 26 மாநிலங்களில் பரவியுள்ளது.

image

இந்தியாவில் தற்போதைய வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 3.47 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு விகிதம் 6.43 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் தற்போது 97.81 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,43,41,009 ஆகும். நாட்டில் சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. தற்போது 2,85,401 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 90,928 ஆக உயர்ந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 26,538 பேரும், மேற்கு வங்கத்தில்14,022 பேரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,481 இலிருந்து 10,665 ஆக கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

image

கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட இரண்டாவது அலையை விட இந்த முறை கோவிட் நோய்த்தொற்றின் சராசரி தினசரி அதிகரிப்பு கிட்டத்தட்ட 21 சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்