இந்தியாவில் குறிப்பாக நகரப்பகுதிகளில் ஒமைக்ரான் வகை கொரோனா அதிகமாக பரவி வருகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் ஐசிஎம்ஆர் அதிகாரிகள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாட்டில் ஒமைக்ரான் வகை கொரொனா அதிகமாக பரவி வருகிறது; குறிப்பாக நகர்ப்பகுதிகளில் வேகமெடுத்துள்ளது எனக் கூறினர். கடந்த 8 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு 6.3 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.
மகாராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் தொற்று பரவல் கவலைக்குரியதாக உள்ளதென கூறினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்