Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உக்ரைன் - ரஷ்யா போரை தவிர்க்க பேச்சுவார்த்தைகள் தீவிரம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை தடுக்க தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. மறுபுறம் போர் பயிற்சிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன

ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைனை எந்நேரமும் தாக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போரை தவிர்ப்பது குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போதைய சூழலில் போரை தவிர்ப்பதன் அவசியம் குறித்து இமானுவேல் மேக்ரோன் புதினிடம் எடுத்துரைத்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷ்யா போரை விரும்பவில்லை என்றும் அதே நேரம் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கை லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

image

உக்ரைனை நேட்டோவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்ற தங்கள் பிரதான கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்துவிட்டதால் இவ்விவகாரத்தில் சமரசத்திற்கு வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். மறுபுறம் ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைன் வான் பகுதியில் அமெரிக்க ட்ரோன்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் படைகளும் ரஷ்யாவை ஒட்டிய எல்லை பகுதியில் பீரங்கிகள் உள்ளிட்ட போர் தளவாடங்களை கொண்டு பயிற்சி செய்யும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ரஷ்யா தனது எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ள நிலையில், இதற்கு பதிலடி தரும் வகையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்கள் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தயார் நிலையில் உள்ளதாக நேட்டோ அமைப்பின் செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்