தொற்றுநோய்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்காக கொரோனாவுக்கு பலியானவரின் உடல் தானமாக வழங்கப்படுவது இதுவே முதன்முறை.
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் வசிப்பவர் நிர்மல் தாஸ் (89). ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நிர்மல் தாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக நிர்மல் தாஸ், உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தார்.
இதையடுத்து உறவினர்களின் ஒப்புதல் பெற்று, நிர்மல் தாஸின் உடல் தொற்றுநோய்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்காக, ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறைக்கு தானமாக வழங்கப்பட்டது. தொற்றுநோய்க்கான மருத்துவ ஆராய்ச்சிக்காக கொரோனாவுக்கு பலியானவரின் உடல் தானமாக வழங்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன்முறை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்