கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகளும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஹரியானாவில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 12ஆம்தேதி வரை மூடப்படுவதாக முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். அதேநேரத்தில், ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் ஒன்று முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு ஜனவரி 9ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்திருக்கிறார். திருமணம் மற்றும் அரசியல், சமூகம் சார்ந்த பொது நிகழ்வுகளில் 100 பேருக்கு மேல் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்