Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

காணொலிக் காட்சி வாயிலாகவே வழக்கு விசாரணைகள் தொடரும் - உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக்கிளையில் இன்று தொடங்கவிருந்த நேரடி விசாரணை முறை, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைப் பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா அதிகரிப்பு காரணமாக காணொலிக் காட்சி வாயிலாகவே வழக்கு விசாரணைகள் தொடரும் என பொறுப்பு தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நேரடி வழக்கு விசாரணை மற்றும் கலப்பு விசாரணை முறை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப் படுவதாகவும் கூறியுள்ளார். வழக்குகள் தாக்கல், உத்தரவு நகல் கோரும் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தவிர்க்க முடியாத நிலையில் குறிப்பிட்ட கவுண்ட்டர்கள் அல்லது பிரத்யேக பெட்டிகளில் விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளார்.

IAS Officers Should Be Shown the Door, if They Don't Comply with Court Orders: Madras HC

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக நிறுத்தப்பட்டிருந்த நேரடி விசாரணை முறை, இன்று மீண்டும் அமலுக்கு வருவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் கொரோனா தொற்று அதிகரித்துவருவதால், அந்த முடிவை தற்காலிகமாக சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்