Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு அறிவித்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரான் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய தமிழ்நாடு அரசு, இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தையும் அறிவித்தது. அதன்படி, இன்று அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பிற சேவைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

நேற்று இரவு 10 மணியில் இருந்து ஊரடங்கு நீடிக்கும் நிலையில், வெளியே தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், எச்சரித்து அனுப்பினர். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென மருத்துவத்துறையும், காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: 'முதல்வர் ஐயா நடவடிக்கை எடுங்க' - அழுதுகொண்டே பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்