Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழ்நாட்டில் இன்று பொதுமுடக்கம் - எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில் நெடு நாட்களுக்குப் பிறகு இன்று முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது இன்று எவற்றுக்கெல்லாம் அனுமதி, எவைக்கெல்லாம் தடை என விரிவாகப் பார்க்கலாம்.

பொதுமுடக்கம் - அனுமதிக்கப்பட்டவை

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஒரு நாள் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. பொதுமுடக்கத்தின் போது அத்தியாவசியப் பணிகளான மருத்துவப் பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து மற்றும் பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.

உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்

உணவு விநியோகிக்கும் மின் வணிக நிறுவனங்கள் அந்த நேரத்தில் மட்டுமே செல்பட அனுமதிக்கப்படும்

பேருந்து, ரயில், விமானப் பயணம் மேற்கொள்வோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி கொள்ளலாம். பயணிக்கும் போது பயணச் சீட்டு வைத்து கொள்ள வேண்டும்

சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, மொத்தம் 343 ரயில் சேவைகள் இயக்கப்படும் என கூறியுள்ளது.

அதேநேரத்தில் பொதுமுடக்கத்தின் போது பொதுபோக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உணவு விநியோகம் தவிர பிற மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை

கோயம்பேடு சந்தை செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்