Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்று நிறைவு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நாளை மறுதினம் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. பலமுனை போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஆளும் திமுக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ளது. அதிமுக சில சிறிய கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கிறது. பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

உள்ளூர் மக்களின் ஆதரவுடன் வெற்றிபெறும் முனைப்பில் சுயேச்சைகளும் ஏராளமானோர் களமிறங்கியுள்ளனர். 10 நாட்களுக்கு மேலாக களைகட்டிய தேர்தல் பரப்புரை, இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று இறுதிக் கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

image

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், தேர்தல் பணிக்காக வெளியூர்களில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.

நாளை மறுதினம் பதிவாகும் வாக்குகள், வரும் 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்கலாம்: சேலம் மாவட்டத்தில் மட்டும் திமுகவை ஏமாற்றி விட்டீர்கள்’ - ஆத்தூரில் உதயநிதி பேச்சு!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்