ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து நடத்தி வரும் போர் பயிற்சியை மேலும் நீட்டிப்பதாக இரண்டு நாடுகளும் அறிவித்துள்ளது உக்ரைன் பிரச்னையில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ராணுவத்தை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் வீரர்கள் பெலாரஸ் நாட்டில் அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கூட்டுப் பயிற்சிகள் நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில் பயிற்சிகள் மேலும் தொடரும் என பெலாரஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் விக்டர் கெரெனின் அறிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதால் இந்த பயிற்சியை நீட்டித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷ்யா சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீரர்களை குவித்து வைத்திருக்கும் நிலையில், வடக்கு பகுதியில் அமைந்துள்ளா பெலாரஸிலும் ரஷ்ய படைகளை நிறுத்தி வைத்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்