பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருந்து வருகிறது. அதன் காரணமாக அங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்பட்டு வரும் போக்குவரத்து நிறுவனங்கள் தங்களுக்கான சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 20 முதல் 50 வரை இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மாகாணத்தின் உள்நகர போக்குவரத்துக்கான கட்டணம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிகரித்து வரும் எரிபொருள் விலை காரணமாக கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என பேருந்து போக்குவரத்து கூட்டமைப்பினர் சொல்லியுள்ளனர். பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையை பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மாதிரியான எரிபொருளின் விலை 9.43 ரூபாய் முதல் 12.03 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
அண்மையில் அந்த நாட்டில் பால் விலை உயர்த்தபட்டதாகவும் சொல்லப்பட்டது.
தொடர்புடைய செய்தி: பொருளாதார மந்தநிலையில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் - 1 லிட்டர் பால் விலை எவ்வளவு தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்