Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"அமெரிக்காவின் வெறி உச்சகட்டத்தை எட்டிவிட்டது" - ரஷ்யா விமர்சனம்

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் வெறி உச்சகட்டத்தை அடைந்துவிட்டதாக ரஷ்யா விமர்சித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேச்சுவார்த்தையை தொடர ஒப்புக்கொண்டிருப்பதாகவும் ரஷ்ய வெளியுறவு ஆலோசகர் யூரி உஸகோ கூறியுள்ளார். இரு தலைவர்களும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யூரி, ரஷ்யாவை பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் அமெரிக்க ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

image

இரு தலைவர்களும் அனைத்து மட்டத்திலும் பேச்சுவார்த்தையை தொடர்வது என ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறினார். உக்ரைனிலிருந்து நேட்டோ படைகளை விலக்கிக்கொள்ளவேண்டும், அந்த நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது உள்ளிட்ட கருத்துக்களை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தனது எல்லையை பாதுகாத்துக்கொள்வதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்திருப்பதகாவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்