Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி' - கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

'ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் கட்டாயமானதில்லை' என கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல் ஹிஜாப்பிற்கும் அனுமதி அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்படுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், தலைப்பாகை சீக்கிய மத்தில் ஒரு அங்கம் என்றும், ஹிஜாப் அதுபோன்றதல்ல என கூறியுள்ளார். ஹிஜாப் குறித்து இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் ஆறேழு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது பெண்ணின் உடை நடைமுறையாக எங்கும் சொல்லப்படவில்லை என கூறினார்.

image

பெண்கள் எந்த உடையை அணியவும் சுதந்திரம் இருப்பதாக கூறிய ஆரிஃப் முகமது கான், அதே நேரம் ஒரு நிறுவனத்துடன் தொடர்பு படுத்தப்படும் போது அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என கூறினார். ஹிஜாப் விவகாரம் ஒரு சர்ச்சையல்ல, இஸ்லாமிய பெண்களின் கல்வியை தடுக்க அது ஒரு சதி என குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க: திடீரென மேற்குவங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்த ஆளுநர் ஜக்தீப்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்