உக்ரைனிலுள்ள தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
உக்ரைன் - ரஷ்ய போர் வலுத்துவரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும்படி பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துவருகின்றனர். தங்கள் பிள்ளைகள் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்படுவதாகவும், விரைந்து அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் கோரிகை விடுத்துவருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ காலில் பேசினார் முதல்வர். அப்போது உணவு உள்ளிட்டவை கிடைக்கிறதா என கேட்டறிந்தார். மேலும், அவர்கள் தமிழக மாணவர்கள் தைரியமாக, பாதுகாப்பாக இருக்கவேண்டும் எனவும் கூறினார்.
இதற்கிடையே, இந்திய மாணவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா விமானம் ருமேனியாவின் புக்காரெஸ்ட் நகரைச் சென்றடைந்தது. ஏர் இந்தியாவில் AI - 1943 என்ற சிறப்பு விமானத்தில் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்