Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகாவில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு

ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகாவில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கவுள்ளன.

பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக முதலில் போராட்டம் வெடித்த உடுப்பி மாவட்டத்தில் அமைதியை உறுதிசெய்வதற்காக எம்.எல்.ஏ ரகுபதி பட் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உதவுதாக உறுதியளித்ததாக ரகுபதி கூறினார். பள்ளி சீருடைகள் கட்டாயமாக்கப்பட்ட பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்த வரக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

image

இதற்கிடையில் இன்று பள்ளிகள் திறப்பதையொட்டி ஆங்காங்கே காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. உடுப்பியில் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் வருகிற 19ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அளித்து கர்நாடகா முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை இன்று கூடவுள்ளது. அதில் ஹிஜாப் மற்றும் மேகதாது அணை பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்