Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வேளாண் பட்ஜெட் 2022-23: பயிர்காப்பீடு திட்டத்திற்கு 2,339 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கலானது. 

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அத்துறைக்கென தனியாக பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தேர்தலில் வென்ற திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடந்த ஆண்டு மாநிலத்தின் முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்தாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இப்பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகாவிற்கு பிறகு வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் 3ஆவது மாநிலம் தமிழகம் ஆகும்.  கடந்த ஆண்டின் 86 வகையான அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். 

முக்கிய அம்சங்கள்:

  •  சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்களை அரசு செயல்படுத்தும்
  •  பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் மாநில அரசின் பங்காக ரூ.2,339 கோடி ஒதுக்கீடு
  • 9.26 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடாக ரூ.2,055 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • 7,500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்