Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்மிக தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை ஆலயம், பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ்பெற்றது. ஒவ்வொரு மாதம் பவுர்ணமி அன்று பக்தர்கள் மலைப்பாதையில் கிரிவலம் சென்று இறைவழிபாடு மேற்கொள்வர். கொரோனா காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

image

கொரோனா விதிகளை கடைப்பிடித்து கிரிவலம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தங்களது நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு நிறைவேறி இருப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: ’’எனக்காக போராடிய மற்றொரு தாய் செங்கொடி’’ - அஞ்சலி செலுத்திய பேரறிவாளன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்