Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"இந்தியா எப்போதும் உதவ தயாராக இருக்கிறது”- பிரதமரை சந்தித்தபின் இலங்கை தூதரகம்

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, மீனவர்கள் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவித்திருக்கிறது இலங்கை தூதரகம்.

கொரோனா பரவல் அதிகம் இருந்த நேரத்தில் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் இலங்கைக்கு, பெட்ரோலியப் பொருள்கள் கொள்முதலுக்காக இந்திய அரசு 3,750 கோடி ரூபாய் கடனுதவி அளித்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது பொருளாதார வீழ்ச்சியின்போது தங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு அவர் நன்றி கூறினார்.

image

இந்தச் சந்திப்பு குறித்த இலங்கை தூதரகத்தின் அறிக்கையில், `இந்தியா எப்போதும் இலங்கைக்கு உதவ தயாராக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையில் வேளாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா, மீனவர் பிரச்னை என இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுகுவது, கைதாகும் மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிப்பது உள்ளிட்டவற்றை விவாதித்ததாகவும் இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்தி: ஜப்பானில் 11 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்