Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச நீதிமன்ற உத்தரவை புறக்கணித்தால்! ரஷ்யாவுக்கு செலன்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் மீதான படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்பட்டு விடும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்த ரஷ்யா, முக்கிய நகரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. ஒரு புறம் ரஷ்யாவை கண்டித்து ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை அறிவித்து வரும் சூழலில், மறுபுறம் ரஷ்யாவை எதிர்கொள்ள ராணுவ உதவிகளை உக்ரைன் கேட்டு பெற்று வருகிறது. மேலும், போரை நிறுத்த ரஷ்யாவின் உயர் நிலை குழுவுடன், உக்ரைன் குழுவினரும் பெலாரஸில் அடுத்தடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். அதில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மனிதாபிமான அடிப்படையில், மக்கள் வெளியேற வசதியாக போர் நிறுத்த நடவடிக்கை ஒரு சில மணி நேரங்கள் வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

image

இந்தச் சூழலில் போரை முற்றிலும் நிறுத்தக் கோரி நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை புறக்கணித்தால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியின் உரை - எழுந்து நின்று மரியாதை செலுத்திய அமெரிக்க எம்.பி.க்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்