Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சீறுமா சிஎஸ்கே சிங்கங்கள்? முதல் வெற்றியை பதிவு செய்யுமா லக்னோ?

முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி, அதே நிலையில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் 2022 இன் 7வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிராக வெளிப்பட்ட சென்னை அணியின் பதற்றத்தை தனக்கு சாதகமாக்கி வெற்றியை குவிக்க திட்டம் வகுக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இந்தப் போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ஜடேஜா கொல்கத்தாவுக்கு எதிராக பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கேப்டன்சி அணுகுமுறையும் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் ஐபிஎல் விளையாட்டை சக புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) க்கு எதிராக விளையாடியது மற்றும் கேஎல் ராகுல் தலைமையிலான அந்த அணி நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

LSG Vs CSK Playing XI: ಸಿಎಸ್ಕೆ ತಂಡಕ್ಕೆ ಸ್ಟಾರ್ ಆಟಗಾರ ಕಂಬ್ಯಾಕ್: ಉಭಯ ತಂಡಗಳ ಪ್ಲೇಯಿಂಗ್ 11 | IPL 2022 LSG Vs CSK Playing XI Moeen Ali Will Return Lucknow Super Giants Vs Chennai Super

சென்னை அணியை பொறுத்தவரை கொல்கத்தாவுக்கு எதிராக மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தியிருந்தது. கடந்த சீசனின் ஆரஞ்சு கேப் வின்னர் ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பான துவக்கத்தை அளிக்கும் பட்சத்தில் அது அணிக்கே பெரும் நம்பிக்கையாக அமையும். சென்ற முறை தனிமைபடுத்துதலில் இருந்த மொயின் அலி இந்த ஆட்டத்தில் அணிக்கு திரும்புவது அணிக்கு பெரும் பலமாக அமையும். 3 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கேப்டன் தோனி விளாசிய அரைசதம் அணிக்கு கூடுதல் வலுசேர்த்துள்ளது. முதன்முறையாக கேப்டன் பதவியேற்ற பதற்றம், ஜடேஜாவின் பேட்டிங்கில் வெளிப்படையாக தெரிந்தது. தனது இயல்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். கேப்டன் பதவியில் இருக்கும்போது கூடுதல் பொறுப்புடன் ஆடி சிறப்பான ஆல்ரவுண்டராக அவர் செயல்பட்டால் அது லக்னோ அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிடும். டெவோன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு ஆகியோரும் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். புதிய வரவான லக்னோவை ஆட்டம் காணச் செய்யலாம்.

பவுலிங்கிலும் சென்னை கவனத்துடன் செயல்பட வேண்டியதும் அவசியம். ஆடம் மில்னே, மிட்செல் சாண்ட்னர். தீபக் சாஹர் சிறப்பாக பந்துவீசி லக்னோவில் டாப் ஆர்டரை பிரிக்காவிட்டால், 200 ரன்களை கூட அந்த அணி எட்டி நின்றுவிடும். பிராவோவும் தனது வழக்கமாக பவுலிங் தாக்குதலை தொடுக்கும்பட்சத்தில் லக்னோவை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட இயலும். இந்த ஆட்டத்தில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டர் 19 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசிய இவரை இந்த ஆட்டத்தில் பயன்படுத்த சென்னை அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Image

லக்னோ அணியை பொறுத்தவரை, பேட்டிங்கை பற்றி கவலைப்பட எதுவுமில்லை. கேஎல் ராகுல் , மனிஷ் பாண்டே துவக்கத்தில் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்தால் பின்வருபவர்கள் இமாலய ஸ்கோரை நோக்கி அணியை நகர்த்தி விடுவார்கள். எவின் லூயிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருனால் பாண்டியா, தீபக் ஹூடா, குயின்டன் டி காக் என ரன்குவிப்பிற்கு ஒரு பெரிய பட்டாளத்தையே வைத்துள்ளது. ஒருவர் வீழ்ந்தாலும், அடுத்து வருபவர் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு வலுவான பேட்டிங் லைன் - அப். பந்துவீச்சிலும் அந்த அணி கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ரவி பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் போன்றோர் கச்சிதமாக பந்துவீசாவிட்டால், நாலாப்புறமும் வான வேடிக்கை நிகழ்த்தி விடுவார்கள் சிஎஸ்கே பேட்டர்கள். துஷ்மந்தா சமீரா, ஆண்ட்ரூ டை இன்னும் சிறப்பாக பந்துவீசி பார்ட்னர்ஷிப் பில்ட் ஆக விடாமல் தடுக்க வேண்டும். மற்றபடி அந்த அணியின் ஒரே பிரச்னை இடியாப்ப சிக்கல் மிக்க ராகுலின் கேப்டன்சிதான். எப்போது யாரை பந்துவீச வைக்க வேண்டும் என்பதில் அவர் எடுக்கும் முடிவுகள் புரியாத புதிராகவே தொடர்கிறது. இதை அவர் சரிசெய்யாவிட்டால் நடப்பு சாம்பியன் மிக எளிதாக வெற்றியை ருசித்துவிடும்.

Image

ஆடுகளம் சற்றே மெதுவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளதால், இது ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமையும். சேசிங்கில் பனி முக்கியக் காரணியாக விளங்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கையே தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம். பதற்றத்தில் இருக்கும் ஜடேஜா, குழப்பமான கேப்டன்சியில் திணறும் ராகுல்! இருவரில் முதல் வெற்றியை பெறப்போவது யார்? இன்று 7.30 மணிக்கு துவங்கும் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

-ச.முத்துகிருஷ்ணன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்