Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

உபி.யில் பாஜக வெற்றி - வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாய சங்கம் என்ன சொல்கிறது?

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவரான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த உத்தரப் பிரதேச மாநிலத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது பாஜக. இந்த வெற்றியைத் தொடர்ந்து பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராகிறார்.

image

இந்த நிலையில் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தியவர்களில் முக்கியமானவரான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் டிக்கைட், உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ''உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றியால் எங்களுக்கு இழப்பு ஏதுமில்லை. நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல, நாங்கள் புரட்சியாளர்கள், ஆர்வலர்கள். எனவே இது எங்களுக்கு வெற்றியோ தோல்வியோ இல்லை" என்று ராகேஷ் டிக்கைட் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  “இந்த வெற்றி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்” - தொண்டர்கள் மத்தியில் மோடி பேச்சு 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்