ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளும்படி உக்ரைன் சார்பில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
விண்னப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டதாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. உக்ரைன் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற தலைவரும் அதில் கையெழுத்திட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய அந்த 27 நாடுகளும் ஒருமனதாக இசைவு தெரிவிக்கவேண்டும். உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைக்க சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கபப்டுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்