Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்காது’- அதிபர் செலன்ஸ்கி

நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய வேண்டும் என்ற தனது மனநிலை மாறிவிட்டதாக அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நேட்டோ படையில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாடு குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை என்பதை தான் புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போர் மற்றும் சர்ச்சைகளைக் கருத்தில் கொண்டே நேட்டோ அமைப்பு உக்ரைனை படையில் சேர்த்துக் கொள்ள அஞ்சுவதாக செலன்ஸ்கி கூறியுள்ளார்.

image

மேலும் எதையும் காலில் விழுந்து கெஞ்சிப் பெறும் நாடாக உக்ரைன் இருக்கக் கூடாது தான் எண்ணுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு வாக்களித்த மக்கள் சரணடைய தயாராக இல்லை என குறிப்பிட்ட செலன்ஸ்கி, ரஷ்யாவால் சுதந்திரமான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட உக்ரைனின் அங்கமாக இருந்த கிரீமியா மற்றும் டான்பாஸின் எதிர்காலம் குறித்து ரஷ்யாவுடன் விவாதிப்போம் எனவும் கூறினார்.

இதையும் படிக்க: ’எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!’ சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த போர்க்கால புரளி பதிவுகள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்