Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கோவாவில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? - பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி

கோவா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில், கடந்த மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக கோவாவில் போட்டியிட்டது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் கோவாவில் தனித்து போட்டியிட்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று வெளியானது.

கோவாவில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். இந்நிலையில், கோவாவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில், பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 11 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், ஆம் ஆத்மி ஒரு இடத்திலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் அங்கு பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

image

திரிணாமூல் காங்கிரஸ் முதன்முறையாக போட்டியிட்டு 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது முதன் முறையாக கோவா தேர்தல் களத்தை எதிர்கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து நிற்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி, அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 17 இடங்களிலும், பாரதிய ஜனதா 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது. இதனால் இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி, தங்களது வேட்பாளர்கள் கட்சி தாவாமல் இருக்க முன்கூட்டியே ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்