Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேகதாது திட்டத்துக்கு எதிரான தீர்மானம் - கர்நாடகா முதல்வர் கடும் கண்டனம்

மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் எனக் கூறி இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

image

இதனிடையே, மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சிகளும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளித்திருந்தன.

இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

image

இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சட்ட விரோதமான ஒன்று. மற்றொரு மாநிலத்தின் உரிமையில் தலையிட்டதன் மூலம் இது மக்களுக்கு எதிரான தீர்மானம் ஆகும். என்ன நடந்தாலும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தியே தீரும்" என அதில் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்