தஞ்சாவூர் அருகேயுள்ள களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த்திருவிழாவின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடுகிராமத்தில் 94-வது ஆண்டு அப்பர் குருபூஜை விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
களிமேடு அப்பர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த தேரோட்டத்தின் போது மின் கம்பத்தில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க:”ஜெ. மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்” - டிடிவி தினகரன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்