கோவை வட்டாரப் போக்குவரத்து இணை ஆணையர் காரில் இருந்து கணக்கில் வராத ரூ. 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை அவினாசி பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து இணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது இணை ஆணையராக உமாசக்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சவுரிபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்த இவரது காரை வழிமறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில், கணக்கில் வராத 28 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் உமா சக்தியை அழைத்துச் சென்று கைப்பற்ற பணம் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
மேலும், 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலித்த பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை விடுவிக்கவும், பல்வேறு பணிகளுக்காகவும் உமாதேவி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்