ஐபிஎல் கிரிக்கெட்டில் குல்தீப் யாதவின் சுழல் காரணமாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்-தின் கேப்டன்ஷிப் குறித்து விமர்சனமும் எழுந்திருக்கிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை ஈட்டியது. இதன்மூலம் புள்ளிகள் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.
முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, குல்தீப் யாதவின் சுழலில் சிக்கியது. அபாரமாக பந்து வீசிய அவர், 3 ஓவர்களில் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தா அணியின் பேட்டிங் தூண்களான கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல் மட்டுமன்றி, இளம் வீரர் பாபா இந்திரஜித்தையும் ஆட்டமிழக்க செய்தார். இதேபோல், அறிமுக வீரரான சேட்டன் சக்காரியாவும் தொடக்க வீரர் ஆரோன் பின்ச் விக்கெட்டை எடுத்தார். இருவரும் மூன்று ஓவர்களை வீசி குறைவான ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், அவர்களுடைய 4 ஓவர்களையும் முழுவதுமாக வீச கேப்டன் ரிஷப் பந்த் வாய்ப்பளிக்கவில்லை.
ரன்களை அதிகம் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளை எடுக்காத பார்ட் டைம் பவுலரான லலித் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்குருக்கு டெத் ஓவர்களில் பந்து வீசினர். ரன்களை குவிக்க தொடக்கம் முதலே தடுமாறிய கொல்கத்தா அணி, லலித் யாதவ் வீசிய 17வது ஓவரில் 17 ரன்களையும், ஷர்துல் வீசிய 19ஆவது ஓவரில் 16 ரன்களையும் எடுத்தது. முக்கியமான பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ்-க்கு 4ஆவது ஓவரை வீச அனுமதிக்காத ரிஷப் பந்த்தின் தலைமைப் பண்பு ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அதேநேரத்தில் தனது அணி வெற்றி பெறுவதற்காக 8 பந்துவீச்சாளர்களை கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பயன்படுத்தினாலும், மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்திய உமேஷ் யாதவுக்கு அவரது 4 ஓவர்களையும் முழுவதும் வீச அனுமதித்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிக்கலாம்: சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்