இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவி செய்திட மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி, சட்டமன்றத்தில் இன்று அரசினர் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களைக் கூட வாங்க முடியாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அரிசி, பருப்பு, பால் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் உயிர் காக்கும் மருந்துகளையும் அனுப்ப தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு உரிய அனுமதி வழங்க வேண்டுமென ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து இதுவரை மத்திய அரசிடமிருந்து எவ்வித தெளிவான பதிலும் கிடைக்காத நிலை உள்ளது.
எனவே, இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் உயிர் காக்கும் மருந்துகளையும் தமிழ்நாட்டிலிருந்து அனுப்ப தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தை முன்மொழிவார்.
இதையும் படிக்கலாமே: ஆளுநர் முடிவு தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்