தமிழ்நாட்டில் யாரெல்லாம் மரியாதை கொடுக்கிறார்களோ அவர்களை தமிழ் வாழ வைக்கும், அவமரியாதை செய்பவர்களை தமிழன்னை பார்த்துக் கொள்வாள் என தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்
திருப்பூர் மாநகராட்சி 55 ஆவது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் காடேஸ்வரா தங்கராஜ் மகள் ஸ்மிருத்தி தங்கராஜின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "மாணவர்கள் படிப்போடு சேர்த்து இசை நாட்டியம் உள்ளிட்ட ஏதேனும் கலையைக் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் வாழ்க்கை கலையாமல் மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்ள முடியும்" என தெரிவித்தார்
சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டு கல்வித்துறை, இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மற்றும் சென்னை வானவில் பண்பாட்டு மையம் ஆகியவை இணைந்து மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வரங்கை நடத்தின. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழிசை சௌந்தரராஜன், " சமூக இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள் திட்டுவதற்கு கூட. தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்.
அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் "இரண்டு மாநிலத்தில் அவள் ஆளுநராக இருக்கிறாள்" என்று ஒருமையில் பேசியிருக்கிறார், இரண்டு மாநிலத்தில் ஒரு பெண் ஆளுநராக இருப்பது எவ்வளவு சிரமம், ஒரு தமிழச்சி இரண்டு மாநிலங்களை ஆண்டு கொண்டு இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும். எனவே ஒருவரை திட்டும் போது கூட மரியாதையோடு திட்டுங்கள். ஏனென்றால் தமிழுக்கு மரியாதை உண்டு, தமிழக்கு மரியாதை இல்லையென்றால் நீங்கள் தமிழர்களே இல்லை" என வருத்தப்பட்டு பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்