Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இலங்கையில் சமூகவலைத்தளங்கள் முடக்கம்

இலங்கையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க சமூகவலைத்தளங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் செயல் இழந்துள்ளன.

இலங்கையில்  ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர், யூ-டியூப் உள்ளிட்ட செயலிகள் நள்ளிரவு முதல் இயங்கவில்லை என்று, சர்வதேச அளவில் இணைய செயல்பாடுகளை கண்காணிக்கும் NetBlocks என்ற நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் வெகுண்டெழுந்த மக்கள், ராஜபக்ச சகோதரர்கள் அரசிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகன எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. இன்று மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கு மக்கள் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

image

இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை (36 மணி நேரத்துக்கு) ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்த அரசு கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாறி ஒன்றுகூடிவிடுவார்களோ என்று எண்ணியே இலங்கை அரசு இந்த சமூகவலைதள முடக்கத்தை அமல்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், ஊரடங்கு உத்தரவை மீறி கொழும்புவின் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அதேபோல பிற இடங்களிலும் போராட்டம் கூடுமா என்பது, சூழலை பொறுத்தே தெரியவரும்.

சமீபத்திய செய்தி: ராஜஸ்தானில் வெடித்த கலவரம்... 144 தடை உத்தரவு அமல்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்