A சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்களை திரையரங்குகள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தணிக்கை குழு எச்சரிகை விடுத்துள்ளது.
இந்திய திரைப்படங்களுக்கு U, UA, A என 3 வகையாக பிரித்து சான்றிதழ் வழங்கி வருகிறது தணிக்கை குழு. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் மற்றும் ஆபாச காட்சிகள் இருந்தால் தணிக்கை குழு A சான்றிதழ் வழங்கும்.
U சான்றிழ் படங்களை அனைத்து வகையினரும் பார்க்கலாம். U/A சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதுக்குட்பட்டோர் தங்கள் பெற்றோருடன் பார்க்கலாம். ஆனால் A சான்றிதழ் படங்களை பார்க்க 18 வயதை கடந்தவர்களை மட்டுமே திரையரங்குகள் அனுமதிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
விதிகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வரும் நிலையில் அது குறித்து திரையரங்க உரிமையாளர்களை கேட்டபோது, A சான்றிதழ் படங்களாக இருந்தால் சிறுவர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இனி விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என தணிக்கை குழு திரையரங்கங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. அதில் A சான்றிதழ் படங்களுக்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் மீறினால் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க: மணி ஹெய்ஸ்ட்டா? கூர்காவா? .. பீஸ்ட் ட்ரெய்லரை அனல்பறக்க தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்